திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து
சென்னை:
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரி, அதை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், கல்லூரிமாணவியை வெறித்தனமாக கத்தியால் குத்தினார். தடுக்க வந்த அவரது தாயையும் அந்த வாலிபர் கத்தியால்குத்தினார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இதே பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர்மதுரவாயலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார்.
சரவணன் டிரைவிங் பள்ளி நடத்தி வருகிறார். சமீபத்தில் கல்லூரி விடுமுறையின்போது சரவணனின் டிரைவிங்பள்ளிக்கு வந்து கார் ஓட்டக் கற்றுக் கொண்டார் அபிநயா.
அப்போது அபிநயாவின் அழகில் மயங்கிய சரவணன், அவர் மீது ஒரு தலையாக காதல் கொண்டார். தனதுகாதலை அபிநயாவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அபிநயா கல்லூரிக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் தொந்தரவுசெய்ய ஆரம்பித்தார். இந்த தொல்லை உச்சகட்டத்தை எட்டி, அபிநயாவை தடுத்து நிறுத்திய சரவணன், கல்லூரிவாசலிலேயே காத்திரு, அங்கு வந்து உன்னை அழைத்துக் கொண்டு வடபழனிக்குச் சென்று திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார் சரவணன்.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிநயா, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், அபிநயாவை கல்லூரிக்குப்போக வேண்டாம் என கூறி விட்டனர். இதனால் அபிநயா கல்லூரிக்குச் செல்லவில்லை.
கல்லூரிக்குச் சென்று பார்த்து விட்டு அபிநயா வராததால் ஏமாற்றமடைந்த சரவணன் ஆத்திரத்துடன் அபிநயாவின்வீட்டுக்குச் சென்றார். கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணில் பட்ட அபிநயாவை சரமாரியாக குத்தினார்.அதைப் பார்த்து விட்டு தடுக்க ஓடி வந்த அவரது தாயார் சந்திரலேகாவையும் சரமாரியாகத் தாக்கினார்.
இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழவே சரவணன் அங்கிருந்து ஓடி விட்டார். உடனடியாக அபிநயாவும்,சந்திரலேகாவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படிபோலீஸார் சரவணனைக் கைது செய்து ஈவ் டீசிங் தடுப்புச் சட்டத்தின் கீழும், கொலை முயற்சி வழக்கும்தொடர்ந்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications