மருத்துவம்: 2 அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்:
2004ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆக்ஸல், லிண்டாபக் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
மனிதர்களின் நுகரும் சக்திக்குக் காரணமான சுமார் 1,000 ரக மரபணுக்களை (ஜீன்கள்) அடையாளம் கண்டதற்காகஇவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த ஜீன்கள் உருவாக்கும் சுமார் 1,000 நுகர்வு இழைகள் தான் நாம் எதை நுகர்கிறோம் என்பதை நமக்குஅடையாளம் காட்ட காரணமாக அமைகின்றன.
இவர்கள் பிரித்து அடையாளம் கண்ட ஜீன் குடும்பம் நமது உடலின் மொத்த ஜீன்களின் 3 சதவீதத்தைஆக்கிரமிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிச்சர்ட் ஆக்ஸல் (58), நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாவர்ட் ஹூயுக்ஸ் மருத்துவஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுகிறார். லிண்டா பக் (57) சியாட்டிலில் உள்ள பிரட் ஹட்சின்சன் புற்று நோய்ஆராச்சி மையத்தில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நோபல் பரிசையும், 1.3 மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
மருத்துவத் துறையைத் தொடர்ந்து வரும் 11ம் தேதி வரை பிற துறைகளுக்கான நோபல் பரிசுகள்அறிவிக்கப்படும்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு வரும் 8ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications
