பாஸ்போர்ட் விதிமுறைகள் தளர்வு
டெல்லி:
பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஹமது நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் உள்ள பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் 1.90 லட்சம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளன. 3 மாதங்களுக்குள் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்என்று உத்தரவிட்டிருக்கிறோம். இதற்காக பாஸ்போர்ட் வழங்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி புதுப்பிக்க கோரி அனுப்பப்படும் பாஸ்போர்ட்களில் குடியிருப்பு விலாசம் மாறவில்லை என்றால்,அதற்கு உடனே அனுமதி கொடுத்து விடலாம். அதை போலீஸ் விசாரணைக்கு அனுப்ப வேண்டிய அவசியம்இல்லை.
தட்கல் முறையில் வரும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு உடனே பாஸ்போர்ட் வழங்கிவிட்டு, பின்னர் இதன்மீதான போலீஸ் விசாரணை பெறப்படும்.
போலீஸ் விசாரணைக்கு பாஸ்போர்ட்டு மனுக்களை அனுப்பி பெறுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க, அந்தந்தமாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பாஸ்போர்ட் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேச அறிவுறுத்தப்பட்டுஇருக்கிறது.
பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிதாக்குவது குறித்து ஆராய 2001ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு தனது அறிக்கையை 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசிடம் அளித்தது. அந்த குழுவின்பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் அலுவலககட்டடங்களில் இருந்து தரகர்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அஹமதுகூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications