2,108 காவலர் பதவிக்கு குவிந்த 27,000 பெண்கள்
சென்னை:
தமிழகத்தில் 2,108 பெண் காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு தமிழகத்தில்மொத்தம் 14 மையங்களில் இன்று முதல் தொடங்கியது. இதில் பி.இ. படித்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானபெண்கள் பங்கேற்றனர்.
முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் சரி பார்த்தல், 400 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகியவைநடந்தன. பல பெண்கள் பாவாடை- தாவணி, சேலையில் வந்திருந்தால் ஓட முடியாமல் தடுமாறினர்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த இந்தத் தேர்வின்போது ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.
திருமணமானவர்கள், திருமணமாகாதோர், பட்டதாரிப் பெண்கள் என பல தரப்பினரும் ஆயிரக்கணக்கில்வந்திருந்தனர். அதே போல மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 14 இடங்களில்நடந்த தேர்வில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருந்தனர்.
மொத்தமுள்ள 2,108 பெண் காவலர் பதவிகளில சேர மொத்தம் 27,000 பெண்கள் விண்ணிப்பித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகஅளவில் தேர்வுக்கு வந்திருந்தனர். நாளை குண்டு எறிதல் உள்ளிட்ட சில போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் சங்கத்தலைவரான டிஜிபி அலெக்சாண்டர் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications