மைனர் பெண்.. உடலுறவு.. ஏமாற்றிய போலீஸ்காரர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திருமண ஆசை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு கல்யாணம் செய்ய போலீஸ்காரர் மறுத்ததால்,ஆயுதப்படை மைதானத்திலேயே உண்ணாவிரதம் இருந்தார் இளம்பெண் ஒருவர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள லட்சுமாங்குடியை சேர்ந்தவர் காமராஜ் என்பவரின் மகள்சிவரஞ்சனி (17). மதுரை அருகே உள்ள வெள்ளையம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். புதிதாக போலீஸ்வேலைக்கு சேர்ந்த மணிகண்டன் பயிற்சிக்காக லட்சுமாங்குடி காவல் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு கம்ப்யூட்டர் வகுப்புக்குச் சென்ற சிவரஞ்சனியை துரத்தி காதலித்துள்ளார். சிவரஞ்சனியும் காதலுக்குசம்மதித்துள்ளார். பயிற்சி முடிந்து மணிகண்டனுக்கு மதுரை ஆயுதப்படைக்கு மாற்றல் கிடைத்தது.

இதனையடுத்து சிவரஞ்சனியை மதுரைக்கு வருமாறு மணிகண்டன் கடிதம் போட்டு அழைத்துள்ளா.சிவரஞ்சனியும் மதுரை வந்து மணிகண்டனை சந்தித்தார். அவரை மணிகண்டன் மேலவளவில் உள்ள தனதுஅத்தை வீட்டில் தங்க வைத்துள்ளார்.

சுமார் 13 நாட்கள் அங்கு சிவரஞ்சனி தங்கியிருந்தபோது மணிகண்டன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.

இந் நிலையில் திடீரென சிவரஞ்சனியை அவரது ஊருக்குப் போகும்படி மணிகண்டனும், அவரது உறவினர்களும்கூறியுள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவரஞ்சனி கூற, அதை மணிகண்டன்நிராகரித்துள்ளார்.

இதனால் சிவரஞ்சனி நேராக மதுரை கமிஷ்னரை சந்தித்து தன்னை மணிகண்டன் ஏமாற்றியது குறித்து புகார்கூறினார். ஆனால் கமிஷ்னர் அந்தப் புகாரை மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பினார். எஸ்.பி. அந்த புகாரைஆயுதப்படை கமாண்டருக்கு அனுப்பினார்.

இவ்வாறு போலீஸ் தன்னை அலைக்கழித்ததால் மனம் உடைந்த சிவரஞ்சனி, இன்று காலை மதுரை எஸ்.பி.அலுவலகம் எதிரே உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு முன்பு திடீரென உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து ஆயுதப்படை எஸ்.பி. கோவிந்தராஜன் சிவரஞ்சனியிடம் வந்து, உனக்கு 17 வயது தான் ஆகிறது.18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சமாதானம் பேசினார்.

இதில் சமாதானம் அடையாத சிவரஞ்சனி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து தொடர்ந்து பேச்சுநடத்தி சிவரஞ்சனியை ஓரளவு சமாதானம் செய்த எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்த அலுவலகத்தின் உள்ளேஅழைத்துச் சென்றார். தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.

ஜெயலட்சுமி விவகாரத்தால் ஏற்கனவே களங்கமாகியிருக்கும் காவல்துறை இப்போது மேலும் ஒரு குற்றச்சாட்டில்சிக்கியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+