திருச்சியில் தொடரும் ரெளடிகள் கொலை
திருச்சி:
திருச்சி மணிகண்டம் பகுதியில் ரெளடி கோஷ்டிகளுக்கிடையே அடிக்கடி நடக்கும் மோதலால் ரெளடிகள் வெட்டிக்கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
திருச்சி மணிகண்டம் பகுதியில் முட்டை ரவி, சேட் ஆகிய இரு ரெளடிகளும் தனித் தனி கோஷ்டியாக செயல்பட்டுவந்தனர். இரு ரெளடிக் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதும் சகஜம்.
கடந்த ஜூலை 26ம் தேதி சேட் உள்ளிட்ட சிலர் ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது, முட்டை ரவி கோஷ்டியினர் அவர்களை வழிமறித்து வெட்டினர்.
இதில் சேட், சுரேஷ், டிங்கி ஆகியோர் கொல்லப்பட்டனர். ரெளடிகள் வெட்டியதில் டிங்கியின் தலை உடலில்இருந்து துண்டாகிப் போனது.
இந்த சம்பவம் தொடர்பாக முட்டை ரவி, மாதவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேர்நீதிமன்றங்களில் சரணடைந்தனர். இவர்கள் அனைவருமே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு திருச்சி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் ஆஜராகி முட்டை ரவிக்கு எதிராக சாட்சியம் சொல்ல இருந்தார்சேட்டின் ஒன்றுவிட்ட தம்பியான அகஸ்டின் (33). இவரும் பெரிய ரெளடி தான்.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த நிலையில் முட்டை ரவி கோஷ்டியினர் சிலர் அகஸ்டினையும் அவரதுநண்பர் கொளஞ்சியையும் திடீரென தாக்கினர். சரமாரியாக வெட்டினர்.
இதில் அகஸ்டின் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொளஞ்சிக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்துகொலையாளிகள் மூவரும் தப்பியோடிவிட்டனர்.
3 மாத கால இடைவெளியில் 4 ரெளடிகள் மணிகண்டம் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிமக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. திருச்சியின் ராம்ஜி நகர், நாகமங்கலம், மணிகண்டம் ஆகிய புறநகர்ப்பகுதிகள் ரெளடிக் கும்பல்களால் கொலைக் களங்களாக மாறி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications