புதிய வீராணத்திற்கு தடை கோரி பாமக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில், கடலூர் மாவட்டத்திலிருந்து ஆழ்குழாய் கிணறுகள் மூலம் சென்னைக்குத்தண்ணீர் விநியோகிப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்துசென்னை நகர மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்து திட்டம் தீட்டியது.

இருப்பினும் வீராணம் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாததால், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஆழ்குழாய்கிணறுகளை அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம்செய்து வருகிறது தமிழக அரசு.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூர்மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் பாமகவின் விவசாய அணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவில், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே 45 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளைஅமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுத்து புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரப்படுகிறது.

வீராணம் என்ற பெயரை வைத்துக் கொண்டு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வராமல், ஆழ்குழாய்க்கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தமிழக அரசின் இந்த செயலால், நெய்வேலி பகுதியில் நிலத்தடி நீர் வற்றிப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.மேலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். மேலும், நிபுணர்குழு ஒன்றை அமைத்து, நெய்வேலி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், இதுதொடர்பாக 4 வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறுகூறி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+