ஜெ. மீது ஜெய்பால் ரெட்டி கடும் தாக்கு
சென்னை:
மத்திய அரசுக்கு யோசனை சொல்லவும், நெருக்குதல் தரவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தார்மீகரீதியில் முழுஉரிமை உண்டு என மத்திய செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறினார்.
சென்னையில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது, கருணாநிதி ஏதோ பிரதமர் போல செயல்படுவதாகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே என்று கேட்டபோது பதிலளித்த ரெட்டி,
மத்திய அரசுக் கூட்டணியில் திமுக இடம் பெற்றுள்ளது. கூட்டணியின் மிக முக்கியமான கட்சியின் தலைவர்கருணாநிதி. அரசியல் அனுபவமும் பழுத்த நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
மத்திய அரசுக்கு யோசனை சொல்ல மட்டுமல்ல, கொள்கைகள் விஷயத்தில் நெருக்குதல் தரவும் அவருக்கு முழுதார்மீக உரிமை உண்டு.
ஒரு கட்சி ஆட்சி நடக்கும்போதே ஏதாவது ஒரு தலைவர் நெருக்குதல் தருவது சகஜம். இப்போது நடப்பதுகூட்டணி ஆட்சி. இதில் மக்கள் பிரச்சனைகளில் ஜனநாயகரீதியில் அரசுக்கு யோசனையும் நெருக்குதலும் ஒருகூட்டணிக் கட்சி தந்தால் அதில் என்ன தவறு?
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நேரத்துக்கு ஒன்று பேசுவார். அவருக்கென்று நிரந்தரமான கருத்தோ,நிலைப்பாடோ எப்போதும் இருந்ததில்லை என்றார் ரெட்டி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications