20 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக்கு கடத்தல்

Subscribe to Oneindia Tamil

கொழும் & ராமேஸ்வரம்:

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள்கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.

இலங்கை கடற்படை வீரர்களைக் கண்டதும் சில மீனவர்கள் படகுகளைத் திருப்பிக் கொண்டு தப்பினர். ஆனால் 5படகுகளில் இருந்த 20 மீனவர்களை கடற்படையினர் சுற்றி வளைத்து தங்களது நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்களை இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி மன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள்மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

நட்வருடன் வாசன் பேச்சு:

இந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கிடம் தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்தார். இதில் தலையிட்டு நிச்சயம் உதவிசெய்தவாக சிங் அப்போது உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+