ஜெயலட்சுமி: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
டெல்லி:
ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழககாவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 15ம் தேதி விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்றம்அறிவித்துள்ளது.
தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதனை விசாரிக்கவுள்ளது.
ஜெயலட்சுமி விவகாரத்தில் அமைச்சர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்துள்ள நிலையில் இதை சிபிஐவிசாரித்து விடாமல் தடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தும் அளவுக்கு தன்னிடம் பண வசதி இல்லை என ஜெயலட்சுமிதரப்பு கூறுகிறது.
சிபிஐ அதிகாரி நியமனம்?:
இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கை விசாரிக்க சிவாஜி என்ற அதிகாரி தலைமையில் சிபிஐ குழுஅமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான முக்கிய முடிவு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் பர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐ வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications