திருப்பூர் குமரனுக்கு சிலை வைக்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரனுக்கு சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
காமராஜர் தேசிய காங்கிரஸ் சார்பில், திருப்பூர் குமரனின் நூற்றாண்டு பிறந்த நாள் திங்கள்கிழமை சென்னையில்கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜன், திருப்பூர் குமரனின் படத்தைத்திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள், மெரீனா கடற்கரையில், திருப்பூர் குமரனுக்கு சிலை வைக்கப்பட வேண்டும்.தாம்பரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இல்லம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசைவலியுறுத்தினர்.
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், காமராஜர் தேசிய காங்கிரஸ் நிறுவனர் எம்.எஸ்.ராஜேந்திரன்உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications