நான் இன்னொரு ஜெயலட்சுமியா?: கொதித்தெழுந்த 17 வயது சிவரஞ்சனி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தன்னைக் காதலித்த போலீஸ்காரர் பலமுறை உடலுறவு வைத்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஆனால்காவல்துறையினர் தன்னை மற்றொரு ஜெயலட்சுமியாக சித்தரிக்க முயல்வதாகவும் கூறி மதுரை ஆயுதப்படைபட்டாலியன் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்த 17 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

அதே போல குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ரோட்டில் திடீர் போராட்டம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள லட்சுமாங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி.

இவர் மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஆயுதப்படையின் 6-வது பட்டாலியன் அலுவலகம் முன்பிளாட்பாரத்தில் அமர்ந்து திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

சாகும் வரை உண்ணாவிரதம், காதலனைக் கைப்பிடிக்க போராட்டம் என எழுதப்பட்ட இரு தட்டிகளை கையில்வைத்துக் கொண்டு அவர் உண்ணாவிரதம் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் உள்பட போலீசாரும், அப் பகுதியில் வசிக்கும் காவல்துறை குடியிருப்பைச் சேர்ந்த பெண்களும்ஏராளமான அளவில் அங்கு கூடினர்.

கமாண்டன்ட் விசாரணை:

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது. 6வது பட்டாலியனின் கமாண்டென்ட்கோவிந்தராஜ், உதவி கமாண்டென்ட் சந்திரசேகரன் ஆகியோர் சிவரஞ்சியை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு அனுப்பிய புகாரின் நகலை சிவரஞ்சனியின்வழக்கறிஞர் குணசீலன், அவர்களிடம் வழங்கினார்.

புகார் மனு விவரம்:

அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

எனது தந்தை மலேசியாவில் உள்ளார். நான், எனது தாயார், சகோதரி, சகோதரனுடன் லட்சுமாங்குடியில் வசித்துவருகிறோம்.

பிளஸ்டூ படித்துள்ள நான் கம்ப்யூட்டர் பயிற்சிக்காக லட்சுமாங்குடி காவல் நிலையம் அருகே உள்ள கம்ப்யூட்டர்மையத்திற்கு செல்வது வழக்கம்.

அப்போது காவலர் பயிற்சிக்காக வந்திருந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள வெள்ளையம்பட்டிகிராமத்த்ைச சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகன் மணிகண்டன் என்னை தினமும் பின் தொடர்ந்து வந்துகல்யாணம் செய்து கொள்வதாக கூறினார்.

முதலில் நான் மறுத்தேன். ஆனால் தொடர்ந்து அவர் வந்து வலியுறுத்தியதால் திருமணத்திற்கு சம்மதித்தேன்.எங்களது காதலை லட்சுமாங்குடி காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எதிர்த்தனர். இருவரும் நேரில்சந்திக்கவும் தடை விதித்தனர்.

செல்போனில் காதல்..

Sivaranjani இதனால் மணிகண்டன் எனக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து அதன் மூலம் என்னிடம் பேசுவார்.

ஒரு நாள் என்னிடம் வந்து பயிற்சி முடிந்து விட்டதால் ஊருக்குப் போவதாகவும், அங்கு சென்று பெரியவர்களிடம்பேசி தகவல் கூறுவதாகவும் தெரிவித்து விட்டுச் சென்றார்.

பின்னர் செப்டம்பர் 7ம் தேதி காலையில் எனக்கு போன் செய்தார். உடனடியாக ஊருக்குக் கிளம்பி வருமாறுகூறினார். வீட்டை விட்டுவிட்டு வர முடியாது என்று நான் கூறினேன்.

ஆனால், அவர் விடவில்லை. சுமார் 40 முறை எனக்குப் போன் செய்து உடனடியாக நான் வராவிட்டால் தற்கொலைசெய்து கொள்ளப் போவதாக கூறினார்.

இதையடுத்து காதலனுக்காக வேறு வழியில்லாமல் நான் ஊரை விட்டுக் கிளம்பினேன். மதுரை வந்த என்னைமேலூர் அருகே மேலவளவில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனார் மணிகண்டன்.

அத்தை வீட்டில் வைத்து..

அங்கு செப்டம்பர் 21ம் தேதி வரை என்னைத் தங்க வைத்தார். அவரது அத்தை குடும்பத்தினரும் அதைஎதிர்க்கவில்லை. நான் அங்கு தங்கியிருந்தபோது பலமுறை என்னுடன் உடலுறவு கொண்டார். இது அவரது அத்தைவீட்டினருக்கும் தெரியும்.

இதையடுத்து, என்னை அவரது வீட்டுக்குக் கூட்டிச் சென்று பெற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். ஆனால்அவரது குடும்பத்தினருக்கு என்னைப் பிடிக்கவில்லை. உடனடியாக ஊருக்குப் போய் விடுமாறு அவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், அதை மணிகண்டன் எதிர்க்கவில்லை.

மணிகண்டனும், அவரது நண்பரும் என்னை மாட்டுதாவணி பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு, ஊருக்குப்போய் விடுமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால் நான் போக மறுத்து அழுது கொண்டு அங்கேயே நின்றிருந்தேன்.

அப்போது எனது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த ராயமுத்து என்பவரும் அவரதுதங்கையும் என்னை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்றனர். இப்போது அவர்களது தயவில் தான் வாழ்ந்துவருகிறேன். நான் வீட்டை விட்டு வந்துவிட்டதால், மீண்டும் அங்கு போக முடியாது.

நான் என்ன ஜெயலட்சுமியா?

என்னை திருமணம் செய்வதாகக் கூறி, நம்ப வைத்து பாலியல்ரீதியிலும் அனுபவித்துவிட்டு கைவிட்டமணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன் விஷயத்தை போலீஸாரிடம் நான் புகாராகக் கூறியபோது அவர்கள் என்னை இன்னொருஜெயலட்சுமி போல நடத்த (அனுபவிக்க முயன்றனர்) முயன்றனர்.

எனவே, எனக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சிவரஞ்சனி.

ஆனால், சிவரஞ்சனி அனுப்பிய இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்சுந்தரேசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி இங்கு உண்ணாவிரதத்தில்அமர்ந்துள்ளேன் என்றார்.

Sivaranjaniமணிகண்டன் சஸ்பெண்ட்:

சிவரஞ்சனியின் தரப்பு வாதத்தைக் கேட்ட ஆயுதப்படை கமாண்டென்ட் கோவிந்தராஜ், காவலர் மணிகண்டனைசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறும் மேலூர் போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தோடு போலீசார் நிறுத்தியிருந்தால் அதை நியாயம் எனலாம்.

அனுமதியில்லாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறி சிவரஞ்சனியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர் இப்போது மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ சோதனை:

இந் நிலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவியின் உத்தரவுப்படி சிவரஞ்சனிக்கு மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவரஞ்சனி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். போலீஸ்காரர்மணிகண்டன் சிவரஞ்சனியுடன் பாலியல் உறவு கொண்டாரா என்பதை உறுதி செய்ய இந்தப் பரிசோதனைநடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+