இந்தியாவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
லண்டன்:
இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், காஷ்மீர் உள்படமுக்கிய சுற்றுலாத் தலங்களின் முக்கிய ஹோட்டல்கள் அனைத்தும் தற்போது ஹவுஸ்புல் ஆகியிருப்பதாகவும்மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி கூறினார்.
லண்டனில் இந்திய சுற்றுலா குறித்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் பேசிய ரேணுகா,
செப்டம்பர் 11 தாக்குலுக்குப் பின் உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால்,இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் 3.2 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியா வந்து சென்றுள்ளனர். இப்போதும் பயணிகள் வரத்துகுறையவில்லை. இந்திய விமானங்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகவே உள்ளன. நாட்டின் முக்கிய ஹோட்டல்கள்,காஷ்மீர் உள்பட, அனைத்தும் நிறைந்திருக்கின்றன என்றார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் லார்ட் பால் பேசுகையில், இந்தியர்களுக்கு எப்போதுமே நாட்டின்மீதான பெருமை மிக அதிகம். எந்த நாட்டில் போய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்தியன் என்ற உணர்வைநாங்கள் மறப்பதே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications