பொடா ரத்தால் ஒரு பயனும் இல்லை: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை ரத்து செய்ததால் ஒரு பயனும் இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

திட்ட கமிஷனின் குழுக்களில் அன்னிய நாட்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஆலோசகர்கள் இடம் பெறக் கூடாதுஎன்று இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை எழுப்பின.

இதையடுத்து அன்னிய நிறுவனத்தினரை வெளியேற்றுவதை விட்டுவிட்டு, இந்திய பொருளாதார நிபுணர்களும்அடங்கியிருந்த அந்தக் குழுக்களையே ஒட்டு மொத்தமாகக் கலைத்துள்ளது மத்திய அரசு. இது பொறுப்பில்லாத,மிகத் தவறான செயல். மிகவும் அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துள்ளார்கள்.

பொடா சட்டத்தை நீக்கியதால் அச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.பொடாவை முன் தேதியிட்டு நீக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அச் சட்டத்தில் கைதானவர்கள்விடுதலையாக உதவியிருக்கும்.

பொடாவை நீக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்போது இந்த விவகாரத்தை மதிமுகஎழுப்பும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்திலும் இந்தப் பிரச்சனையை எழுப்புவோம்.

என் மீதும் மதிமுகவினர் 8 பேர் மீதும் போடப்பட்ட பொடா வழக்குகளை நீக்குமாறு மறு ஆய்வுக் குழு விதித்தஉத்தரவை பூந்தமல்லி நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. பொடா நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். அங்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

பொடாவை நீக்கினாலும் அதன் பல பிரிவுகளை புதிய சட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். இதை மதிமுக எதிர்க்கிறது.

மத்திய அரசில் மதிமுக சேரவே சேராது. சேது சமுத்திரத் திட்டம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து உள்ளிட்டமதிமுகவின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.

இலங்கையில் அமைதி உருவாக வேண்டும். புலிகள் தான் அந் நாட்டுத் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதைஉலக நாடுகள் ஏற்றுக் கொண்டுவிட்டன. இந்தியாவில் புலிகளின் வன்முறையை நான் என்றும் ஆதரித்ததில்லை.அதே நேரத்தில் இலங்கையில் அமைதி ஏற்பட, தமிழர்கள் நிம்மதியாக வாழ புலிகள் எடுத்து வரும் முயற்சிகளைஆதரிக்கிறேன்.

கோவையில் வரும் 9ம் தேதி மதிமுகவின் விவசாயிகள் மாநாடு நடக்கிறது. அதை முன்னாள் பிரதமர் வி.பி.சிங்தொடங்கி வைப்பார். இதே போன்ற மாநாடுகளை திண்டுக்கல், விழுப்புரத்திலும் நடத்தவுள்ளோம்.

1 லட்சம் பேர் கொண்ட மதிமுக இளைஞர் படையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். சமூகப் பணிகளில்இவர்களை ஈடுபடுத்துவோம்.

வரும் 17ம் தேதி முதல் ஜனவரி வரை மாநிலம் முழுவதும் மீண்டும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்பிறகு தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் செல்ல இருக்கிறேன். கட்சிக்கு அடிமட்டத்தில் இருந்து உயிரூட்டஇருக்கிறோம் என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு:

இந் நிலையில் வைகோ மற்றும் 8 மதிமுகவினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லிபொடா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது சட்ட விரோதமானது.

பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவு மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும். இந்த உத்தரவை ஏற்று தாக்கல்செய்யப்பட்ட மனுவை பொடா நீமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசு வழக்கறிஞரின் மனுவை அப்படியே ஏற்று 9 பேரையும்விடுதலை செய்வது தான் பொடா நீதிமன்றத்தின் பணி.

அதைச் செய்யாமல் வாபஸ் பெறும் தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்துள்ளது நீதிமன்றம். இது தவறு. எனவே எங்களை விடுதலைசெய்ய பொடா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி நீதிபதி வரியவா முன் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+