21 வயதுக்கு கீழ் மது குடித்தால் 3 மாதம் ஜெயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், ஹோட்டல் பார்களில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த அவசர உத்தரவு தொடர்பான சட்டத் திருத்தத்தையும் அரசுமேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் சென்னை நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி விட்டு வந்த நான்கு வாலிபர்கள், ஸ்டெபானி என்றஇளம் பெண்ணை காரில் துரத்திச் சென்று அவர் மீது மோதி அந்தப் பெண்ணைக் கொன்று விட்டனர். கைதானவாலிபர்களில் ஒருவருக்கு வயது 16 என்பது தெரிய வந்தபோது தமிழகமே அதிர்ந்தது.

இதைத் தொடர்ந்து ஹோட்டல் பார்களில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்றுதமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக்கான சட்டத்தில்திருத்தம் ஒன்றை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இதன்படி தமிழக அரசின் டாஸ்மாக் மது விற்பனை மையங்கள், பார்கள், ஹோட்டல் பார்களில் 21 வயதுக்குஉட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது.

மது வாங்க வருபவருக்கு 21 வயதுக்கு மேல் இருக்காது என்ற சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவரிடம்வயதுக்கான சான்றிதழைக் கேட்டுப் பெற விற்பனையாளர்கள் தயங்கக் கூடாது.

அப்படிக் கொடுக்கப்படும் வயது சான்றிதழ், அரசு நிறுவனங்களின் மூலமாகவோ அல்லது கல்வி நிறுவனங்களின்மூலமாகவோ வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும். 21 வயதிற்கு உட்பட்டோர் மது அருந்துவதுகண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் வழங்கப்படும் என்றுஅரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+