உயர் நீதிமன்றத்தில் முத்திரைத் தாள்கள் மாயம் !
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய்மதிப்புள்ள முத்திரைத் தாள்கள் காணாமல் போயுள்ளன.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இளங்கோவன், பாலயோகேஸ்வரன் ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு விவரம்:
பாண்டிச்சேரி நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூன் 14ம் தேதி இரண்டு மேல் முறையீட்டு மனுக்களைசென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதற்காக ரூ. 75,001 நீதிமன்றக் கட்டணத்தையும்செலுத்தினோம்.
மேல் முறையீட்டு மனுக்களின் நிலை குறித்து அறிவதற்காக ஜூன் 22ம் தேதி உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.அப்போது, மேல் முறையீட்டு மனுக்கள் பிரிவு கண்காணிப்பாளர், எங்களது மனுக்கள் காணாமல் போய்விட்டதாகவும், அதைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
10 நாட்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு ஜூலை 1ம் தேதி இதுதொடர்பாக தலைமைப் பதிவாளரிடம் புகார்கொடுத்தோம்.
இந் நிலையில் ஜூலை 2ம் தேதி எங்களுக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதில், எங்களது மேல் முறையீட்டுமனுக்கள் இருந்தன. ஆனால் அதனுடன் நாங்கள் இணைத்திருந்த பல ஆயிரம் மதிப்புள்ள முத்திரை தாள்கள்அதில் இல்லை.
எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி குலசேகரன், இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரத்தைதாக்கல் செய்யுமாறு தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
போலி முத்திரைத் தாள் விவகாரம் இன்னும் ஓயாத நிலையில் நீதிமன்றத்திலேயே மனுவுடன் இணைக்கப்பட்டமுத்திரைத் தாள்கள் காணாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications