பொறியியல் கல்லூரி: அண்ணா பல்கலைகழத்துக்கு தடை
சென்னை:
தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம்கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சில தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ரத்துசெய்தும், பல்கலைக்கழகத்துடனான அவற்றின் இணைப்பைத் துண்டித்தும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில்உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இக் கல்லூரிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அண்ணாபல்கலைக்கழக நடவடிக்கைக்குத் தடை விதித்தது.
மேலும், தனியார் கல்லூரிகள் மீது தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது தவறானது.அடிப்படை வசதிகள் உள்ளிட்ட புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை, தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றுநீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து 3 வாரத்திற்குள் ஆய்வு செய்து,நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications