ஜெயலட்சுமி: கனரா வங்கியில் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை & சிவகாசி:

Jayalakshmi ஜெயலட்சுமி கணக்கு வைத்துள்ள மதுரை கனரா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை உடனடியாகத் தொடங்கியுள்ளது.சிபிஐயின் கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சிவாஜி இன்று காலை சென்னையில் இருந்து மதுரை வந்தார். இவரது குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள் தனித்தனியாக பிரிந்து ஜெயலட்சுமி குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்கள், அவர்களுக்குஎதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவாஜியும், உதவி எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தியும்ர் இன்று மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கனரா வங்கிக்கிளைக்குச் சென்றனர். அங்கு ஜெயலட்சுமி வைத்துள்ள வங்கிக் கணக்கு குறித்தும், யார் யார் ஜெயலட்சுமியுடன்வங்கிக்கு வந்து செல்வார்கள், ஜெயலட்சுமி கணக்கில் புழங்கிய பண விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள்குறித்து விசாரணை நடத்தினர்.

வங்கி மேலாளர் தோத்தாதிடமும் விசரைணை நடத்தினர்.

காவல் நிலையத்தில்...

இதையடுத்து சிவகாசி அருகே உள்ள மாரநேரி காவல் நிலையத்திற்கும் சிவாஜி செல்லக் கூடும் என்று தெரிகிறது.அங்கு தான் ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான ஆவணங்களை சிபிஐ கேட்டுப் பெறும்.

அதன் அடிப்படையில் மேலும் ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்படக் கூடும்.

ஊர் பேரை சொல்லாதீங்க...

இதற்கிடையே ஜெயலட்சுமி விஷயத்தில் வினோதமான எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஜெயலட்சுமியின் பெயரைக் குறிப்பிடும்போது அவரது பெயருக்கு முன்பாக சிவகாசி என்ற பெயரைப்பயன்படுத்தக் கூடாது என்று சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வரி கட்டுவோர் சங்கத்தின் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

இச் சகத்தின் சிவகாசி கிளைக் கூட்டம் நடந்தது. இதில் சிவகாசியின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில், ஜெயலட்சுமி விவகாரத்தில் சிவகாசியின் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுஅசிங்கப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஜெயலட்சுமி சிவகாசியைச் சேர்ந்தவரே அல்ல. சிவகாசி அருகே உள்ளகிராமத்தைச் சேர்ந்தவர்.

எனவே இனிமேல் ஜெயலட்சுமியின் பெயருக்கு முன்பாக சிவகாசி என்று ஊரின் பெயரைப் பயன்படுத்துவதைஅனைவரும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைகளில்தான் அதிக அளவில் சிவகாசி ஜெயலட்சுமி என்றுகுறிப்பிடப்படுகிறது.

இதன் மூலம் சிவகாசிக்கும் சேர்த்து கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. எனவே யாரும் இனிமேல் ஜெயலட்சுமிபெயருக்கு முன்பாக சிவகாசி என்று எங்களது ஊன் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கோரி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+