பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 38 பேர் பலி
முல்தான்:
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்து 38 பேர் கொல்லப்பட்டனர்;50க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில், தடை செய்யப்பட்ட சிபா சகாபா என்ற சன்னி பிரிவு முஸ்லீம்இயக்கத்தினர் தங்களது மறைந்த தலைவர் மவுலானா அசம் தாரிக்கின் நினைவு அஞ்சலி கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அசம் தாரிக் கடந்த ஆண்டு ஷியா பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏராளமானவர்கள் அவரது நினைவு அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அந்த இடத்தின் அருகேஇருந்த ஒரு காரில் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு நடந்த அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்தஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து அடுத்த குண்டு வெடித்தது.
அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 38 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்தனர். இதில் 50 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கைமேலும் உயரக் கூடும் என்று கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பில் மின்சார வயர்கள் அறுந்துவிழுந்தால் உயிர்ச் சேதம் அதிகரித்ததாக டி.ஐ.ஜி. தலாத் மெஹ்மூத்தெரிவித்தார். ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் இது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலின் எதிரொலியாக ஷியா பிரிவு முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம்நிலவுவதால், முல்தான் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரு பிரிவினருக்கிடையேசமரசம் செய்ய அமைதிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் சியால்கோட்டில் ஒரு மசூதியில் நடந்த வெடிகுண்டு விபத்தில், தொழுகை நடத்திக் கொண்டிருந்த 31பேர் உடல் சிதறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications