புதுவையில் அதிமுக பந்த்; 1,000 பேர் கைது
பாண்டிச்சேரி:
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி அதிமுக விடுத்திருந்த வேலைநிறுத்தஅழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புதுவை முழுவதும் பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டன.ஊர்வலம் நடத்த முயன்ற அதிமுகவினர் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலமாக நடைபெறவில்லை. இந் நிலையில்உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி புதுவை மாநிலத்தில் முழு அடைப்பு நடத்த அதிமுக அழைப்புவிடுத்திருந்தது.
இதனையடுத்து நேற்று முழு அடைப்பு தொடங்கியது. காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.பஸ்கள் எதுவும் ஓடவில்லை. நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. காரைக்காலிலும் இதே நிலைதான்.
கடைகளை அடைக்க சில இடங்களில் வியாபாரிகள் மறுத்ததால் அங்கு அதிமுகவினர் கூடி கடைகளைஅடைக்குமாறு வற்புறுத்தியதால் லேசான பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் வந்து அதிமுகவினரை கலைந்து போகச்செய்தனர்.
இந் நிலையில், கடற்கரைப் பகுதியில் ஊர்வலம் செல்ல மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில்அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கூடினர். ஆனால் போலீஸார் ஊர்வலம் நடத்த அனுமதிஇல்லை என்று கூறி அவர்களைத் தடுத்தனர்.
போலீஸாரின் தடையை மீறி அதிமுகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றதால் அவர்கள் அனைவரையும் போலீஸார்கைது செய்தனர். 1,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாநிலம் முழுவதும் கைதாகியுள்ளதாக போலீஸார்தெரிவித்தனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications