போதை பொருள்: விமான நிலையத்தில் இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கொழும்பு செல்ல முயன்ற 2 பேரை மத்தியதொழில்துறை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் பெரிய பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்தபோதுமுரண்பாடாக பேசினர்.
இதைத் தொடர்ந்து அவர்களது பெட்டிகள் சோதனையிடப்பட்டன. அதில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் இருந்தன.அவர்கள் இருவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவரது பெயர் சதீஷ், இவர் ஒரு என்ஜினியர். இன்னொருவரு பிரசாத்.
இருவரும் கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற இருந்தனர்.
இநத் இருவரும் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications