விசிடி: போலீஸ தொந்தரவுக்கு நீதிமன்றம் தடை
சென்னை:
முறையாக உரிமம் பெற்று சினிமா விசிடிக்களை விற்போரை காவல்துறையினர் எந்தவிதத்திலும் துன்புறுத்தவோ,தொந்தரவு செய்யவோக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரகுபதி என்பவர் உள்ளிட்ட சிலர் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,தாங்கள் உரிமம் பெற்ற விசிடிக்களை விற்பனை செய்து வருகிறோம். திருட்டு விசிடிக்களைப் பிடிக்கிறோம் என்றபோர்வையில் போலீஸார் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர்.
உரிமம் பெற்று விசிடிக்களை விற்பனை செய்து வரும் தங்களுக்கு போலீஸார் தொந்தரவு கொடுப்பதற்குத் தடைவிதிக்கக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை இன்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரித்தார். பின்னர், முறையான உரிமம் பெற்று விசிடிக்களைவிற்று வருவோரை காவல்துறையினர் அச்சுறுத்தவோ, சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யவோ கூடாது.
புகார் வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட விசிடி விற்பனை கடையில் சோதனை நடத்த வேண்டும், நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
திருட்டு விசிடி தொடர்பான காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு விசிடி விற்பனையாளர்கள் ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் இந்த மனு தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications