தங்கத் தாரகை விருது பெற்ற ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் நடந்த விழாவில் தங்கத் தாரகை விருது வழங்கப்பட்டது.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு, பெண்கள்முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்து வரும் பணிகளைப் பாராட்டி அவருக்கு இந்தத் தங்கத்தாரகை விருது வழங்கியது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழாவில்ஜெயலலிதாவுக்கு, சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்பு குழுவின் தலைவரான நடால்யா கிரிவுஸ்தா தங்கத்தாரகை விருதினை வழங்கினார்.

Sasikala, Ilavarasi and ministers in the ceremony
விழாவில் பங்கேற்ற முதல்வரின் தோழி சசிகலா, அவரது அக்காளின் மருமகள் இளவரசி மற்றும்அமைச்சர்கள்

வேள்வி நடத்துகிறேன்: ஜெ:

பின்னர் ஜெயலலிதா பேசுகையில், பெண்களின் மரியாதையையும், அவர்களது உணர்வுகளையும் மதிக்காத,பாதுகாக்காத சமுதாயம், முழுமையான சமுதாயமாக இருக்க முடியாது.

தமிழகத்தில் பெண்களுக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் பாதுகாப்பு அளிப்பதே எனது முதல் பணியாகும்.இதன் அடிப்படையில்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் எனது வேள்வி நடந்து கொண்டுள்ளது.

எத்தனையோ சவால்கள்...

எனது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ அரசியல் சவால்களை நான் சந்தித்துள்ளேன். பெண்என்ற ஒரே காரணத்திற்காக பலவித சோதனைகள் எனக்குத் தரப்பட்டன. ஆனால் பெண்களால் சாதிக்க முடியாததுஎது என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக் கொண்டதால்தான் இந்த இடத்தில் என்னால் அமர்ந்திருக்கமுடிந்திருக்கிறது.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. எனவே பெண்களுக்குஎதிரான அனைத்துக் கொடுமைகளையும் தடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் பெற்றுத் தரகாவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு, காவல்துறை அதிகாரிகள் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+