விசிடி: புதுவை முதல்வரிடம் திரையுலகினர் மனு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
திருட்டு விசிடிக்கு எதிராக தமிழக அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை போல புதுவை அரசும் எடுக்கவேண்டும் என்று கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் முதல்வர்ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சித்ரா லட்சுமணன்,நடிகர்கள் பார்த்திபன், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தது.
திருட்டு விசிடி ஒழிப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையைப் போல புதுவை அரசும் கடும்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரங்கசாமி, நிச்சயம் திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications