கர்நாடக தடை: தமிழத் திரையுலகம் கப்சிப்
பெங்களூர்:
தெலுங்குப் படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன் போராடாடம் நடத்த கன்னடத் திரையுலகினர்முடிவு செய்துள்ளனர். இதற்காக வெள்ளிக்கிழமை அவர்கள் பெல்லாரி செல்கிறார்கள்.
கர்நாடகத்தில் பிற மொழிப் படங்களை 7 வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்று கன்னடத் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டு அதை அமல்படுத்தி வருகிறது. இந்தத் தடை உத்தரவை இந்தி மற்றும்தெலுங்குப் படவுலகினர் மீறி வருகின்றனர்.
இதையடுத்து இந்திப் படம் வெளியிட்ட தியேட்டர்கள் மீது பெங்களூரில் கன்னட வெறியர்கள் கடும் தாக்குதல்நடத்தினர். ஆனால், தெலுங்குப் படங்கள் ஓடும் பெல்லாரி போன்ற பகுதிகளில் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.காரணம், அங்கு தெலுங்கு பேசும் மக்களே அதிகம் வசிக்கின்றனர்.
அதே போல தார்வாட், பெல்காம் ஆகிய பகுதிகளில் தடையை மீறி இந்திப் படங்களை தியேட்டர்உரிமையாளர்கள் திரையிட திட்டமிட்டுள்ளனர். காரணம், அங்கு மராட்டியர்களே பெருமளவில் வசிக்கின்றர்.
இந்த விவகாரத்தில் தமிழத் திரையுலகம் கப்சிப் ஆக உள்ளது. தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் பெங்களூரில்தமிழ்த் திரைப்படங்களை வெளியிட இயலாத சூழல் நிலவினாலும், புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் அமைதிகாத்து வருகிறது தமிழ்த் திரையுலகம்.
மேலும் இது விஷயமாக கர்நாடக திரையுலகினருக்கு எதிராக நம் ஊர் சினிமாகாரர்கள் குரல் கூடகொடுக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகினர் தங்கள் மொழிப் படங்களை திரையிட தடைவிதிக்க கன்னட திரையுலகத்தைச் சேர்ந்தவர்களை இனி எங்கள் படங்களில் நடிக்க அழைக்க மாட்டோம் எனமிரட்டி வருகின்றனர்.
இந் நிலையில், கன்னடத் தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், நடிகர், நடிகையர், இயக்குநர்கள்ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் நடிகர் அசோக் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தடையையும் மீறி பிற மொழிப்படங்களை வெளியிடுகிறார்கள். இனியும் நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது. கர்நாடக அரசு இந்தவிஷயத்தில் மெளனமாக இருந்து வருவதை நாங்கள் ஏற்க முடியாது.
எனவே, 14ம் தேதி முல்வர் தரம்சிங் வீடு முன்பு கன்னடத் திரையுலகினர் அனைவரும் திரண்டு போராட்டம்நடத்தவுள்ளோம்.
பெல்லாரி மாவட்டத்தில் பல திரையரங்குகளில் தெலுங்குப் படங்கள் திரையிடப்படுகின்றன. இதைத் தடுப்பதற்காககன்னடத் திரையுலகினர் அனைவரும் வெள்ளிக்கிழமை பெல்லாரி சென்று அங்கு தெலுங்குப் படங்கள்திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ராஜ்குமாரின் மனைவியும் தயாரிப்பாளருமான பர்வதம்மாவும் கலந்துகொண்டு பிற மொழிப் படங்களுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications