யுவராஜ் ஓபனிங் இறங்க வாய்ப்பு: கங்குலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நாளை தொடங்கும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டியில் யுவராஜ் சிங் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பிருப்பதாக கேப்டன் கங்குலி தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:

நாளை போட்டியில் ஆட்ட வரிசையில் மாற்றம் இருக்கும். துவக்க ஆட்டக்காரராக யுவராஜ் சிங் விளையாடவாய்ப்பிருக்கிறது. ஆகாஷ் சோப்ராவிற்கு பதிலாக முகமது கைப் அணியில் இடம்பெறுவார்.

ராகுல் டிராவிட் வழக்கம்போல் 3வது ஆட்டக்காரராக களமிறங்குவார். லக்ஷ்மன் அதற்கு அடுத்ததாக ஆடுவார்.இது குறித்து தேர்வுக்குழுவினருடன் விவாதிக்க வேண்டியுள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் டெண்டுல்கர் விளையாடாதது வருத்தமளிக்கிறது. நாக்பூரில் நடைபெறும்அடுத்த போட்டியில் அவர் கலந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

சென்னை பிட்ச், பெங்களூரைப் போல் இல்லை. பந்துகள் எகிறும் வகையில் பிட்ச் உள்ளது என்று கூறினார்.

பிளாட்பாரத்தில் சாப்பிட்ட கில்கிறிஸ்ட்:

முன்னதாக சென்னை ஓட்டேரி பகுதிக்கு விசிட் அடித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட்,சாலையோர கடையில் புகுந்து சுடச் சுட ஆப்பம், பாயா சாப்பிட்டு சென்னை பிளாட்பார வாசிகளை அசத்தினார்.

சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட், புரசைவாக்கத்தில் உள்ள இந்தியாபவுண்டேஷன் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றார். அங்குள்ள முதியவர்கள்,ஆதரவற்ற சிறுவர்களைப் பார்த்து பேசினார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்த கில்கிறிஸ்ட், ஓட்டேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி ஒன்றுக்குள்புகுந்தார்.

முற்றிலும் ஏழைகளே வசிக்கும் அப்பகுதிக்குள் கில்கிறிஸ்ட் வந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கானோர் கூடிவிட்டனர். இவரு பேரு இன்னா, இன்னாத்துக்கு நம்ம குப்பத்துக்கு வந்துக்கிராரு போன்ற டிப்பிக்கல் மெட்ராஸ்பாஷைகளுக்கு மத்தியில் புன்னகை பூத்த முகமாக கில்கிறிஸ்ட் வலம் வந்து பேசினார்.

அவர் பேசியது மக்களுக்குப் புரியவில்லை, குப்பத்து மக்கள் பேசியது கில்கிறிஸ்ட்டுக்குப் புரியவில்லை.இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு பாச இழை ஓடியது தெரிந்தது.

பின்னர் அங்குள்ள பிளாட்பாரத்தில் இருந்த சின்னக் கடைக்குச் சென்ற கில்கிறிஸ்ட் அங்கு என்னதயாரிக்கப்படுகிறது என்று கேட்டார். ஆப்பம், பாயா என்று கில்கிறிஸ்ட்டுடன் வந்தவர் மொழிபெயர்த்துசொன்னார். அதை சாப்பிட்டுப் பார்க்க ஆசைப்பட்ட கில்கிறிஸ்ட் ஒரு பிளேட் ஆப்பம், பாயாவுக்கு ஆர்டர்கொடுத்தார்.

பின்னர் சுடச் சுட அவருக்கு ஆப்பம், பாயா கொடுக்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் சுவைத்துப் பார்த்தகில்கிறிஸ்ட், எக்ஸலன்ட் என்று பாராட்டத் தயங்கவில்லை. அவ்வளவுதான் சுற்றிலும் நின்றிருந்த மக்கள்உற்சாகத்துடன் கூக்குரலிட்டனர்.

சிறிது நேரம் ஏழை மக்களோடு செலவிட்ட கில்கிறிஸ்ட் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கில்கிறிஸ்ட்டைஉற்சாகத்தோடு வழியனுப்பிய அந்தக் கூட்டத்திலிருந்து, எம்ஜிஆரு மாதிரியே நல்ல கலருப்பா என்று ஒரு குரலும்வெளிப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+