கருணாநிதியுடன் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
சென்னை & கொழும்பு:
திமுக தலைவர் கருணாநிதியை இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த அவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றார். இருவரும்சுமார் முக்கால் மணி நேரம் தனியே பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில்,
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு தடங்கல் குறித்துகருணாநிதியுடன் பேசினேன்.
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, கடத்தப்படுவது குறித்து கருணாநிதிகவலை தெரிவித்தார். இதைத் தவிர்க்க எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துகருணாநிதியிடம் விளக்கினேன்.
சேது சமுத்திரத் திட்டம் அமைவதை வரவேற்கிறேன். அதே போல இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையேதரைப் பாலத்தையும் அமைக்க வேண்டும். இந்தப் பாலத்தால் சேது சமுத்திரத் திட்டம் பாதிக்கப்படாது என்றார்விக்கிரமசிங்கே.
பேச்சுவார்த்தைக்கு புதிய திட்டம்?:
இதற்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடங்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைஅரசு தெரிவித்துள்ளது.
அரசின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா நிருபர்களிடம் பேசுகையில்,
அரசின் புதிய திட்டத்தை புலிகளிடம் எப்போது வேண்டுமானாலும் வழங்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் முந்தைய அரசை (ரணில் அரசு) அதிபர் சந்திரிகா நீக்கிவிட்டு, புதிய அரசு அமைந்ததில் இருந்துஅமைதிப் பேச்சுவார்த்தைகளை புலிகள் புறக்கணித்து வருவது எங்களுக்கு ஆச்சரியத்தையே தருகிறது.
கடந்த 6 மாதமாக புலிகள் சொன்ன பல புதிய யோசனைகளை பரிசீலித்திருக்கிறோம். அதன்படி அமைதிபேச்சுவார்த்தைக்கு புதிய திட்டம் வகுத்துள்ளோம். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அரசியல்எதிரிகளைப் பழிவாங்கும் புலிகள் மற்றும் பிறரது செயல்கள் அமைதிக்கு உகந்தது அல்ல என்றார்.
பேச்சுவார்த்தைக்காக அரசு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தின் விவரங்களை வெளியிட சமரவீரா மறுத்துவிட்டார்.
தங்களது தலைமையில் வட-கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகம் அமைவதை ஒப்புக் கொண்டால்மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என புலிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications