நடிகர் சங்க பதவி: சரத்குமார் பல்டி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்த நடிகர் சரத்குமார் அதை வாபஸ் பெற்றுள்ளார்.அனைவரது வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 1-ம் தேதி சரத்குமார்அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை சங்க தலைவர் விஜயகாந்த் ஏற்க மறுத்துவிட்டார். மேலும் அவர்தனது ராஜினாமாவை வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் முன்னணி நடிகர், நடிகைகள் ஈடுபட்டனர்.

இந் நிலையில் சரத்குமார் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஐயா படப்பிடிப்புக்காகநெல்லையில் தங்கியிருக்கும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், டிசம்பர் 1, 2ம் தேதி துபாயில் நடிகர் சங்கத்தின் பொன் விழா நடைபெற உள்ளது. அதற்காகவிஜயகாந்த் துபாய் சென்றுள்ளார். என் நோக்கம் சங்கத்தை உடைப்பதோ, அரசியல் கலப்பதோ அல்ல.

நடிகர் சங்க பொன் விழாவுக்கு முதல்-வரை அழைக்கக்கூடாது என்பது என் கருத்து இல்லை. திமுக தலைவர்கருணாநிதி ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர். எனக்கு விழாவில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்பட்டால்அவரை கேட்பேன்.

முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது எனக்குதெரியாது. அவ்வாறு பாராட்டு விழா நடத்தும்போது விழா நடத்துவது சங்கத்தின் மூலமாகவா? கலைத்துறையின்மூலமாகவா என்று கேட்பேன். எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நான் நடித்து வரும் ஐயா எனது 95-வது படமாகும். அடுத்த வருடம் 100-வது படத்தை எடுக்கிறேன். அது சுபாஷ்சந்திரபோஸ் பற்றியதாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன். அது சொந்த தயாரிப்பாகவும் இருக்கலாம்.கருணாநிதி கதை, வசனத்துடன் படம் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+