அறிவியல் கண்காட்சியில் வெடித்த எரிமலை
தஞ்சாவூர்:
சேலம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சாண எரிவாயு கலன் வெடித்து ஒரு மாணவன் பலியானதைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தஎரிமலை வெடித்து 4 மாணவிகள் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்ட கல்வித்துறை சார்பில், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் அறிவியல்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கிட்டப்பா பள்ளியைச் சேர்ந்த சசிகலா, காயத்ரி,பானுப்பிரியா, ரோசலின் ஆகிய நான்கு மாணவிகளும் சேர்ந்து எரிமலையை உருவாக்கியிருந்தனர்.
களிமண்ணால் செய்யப்பட்டிருந்த எரிமலைக்கு உள்ளே வெடிபொருட்களை வைத்து மாணவிகள் எரிமலையைஉருவாக்கியிருந்தனர். வெடிபொருட்களை பற்ற வைத்து எரிமலையை பரிசோதிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக எரிமலை வெளிப்புறமாக வெடித்துச் சிதறியது.
இதில் சசிகலா உள்ளிட்ட 4 மாணவிகளும் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குஅவர்களை ஆசிரியர்களும், சக மாணவிகளும் எடுத்துச் சென்றனர். அங்கு சசிகலாவின் கண்ணில் இரும்புத்துகள்கள் ஊடுறுவியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சமீபத்தில் சேலம் பள்ளியில் சாண எரிவாயு கொள்கலனை காட்சிக்கு வைத்திருந்தபோது அது வெடித்துச் சிதறி ஒருமாணவன் பரிதாபமாக பலியானது நினைவிருக்கலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications