சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது
சென்னை:
சென்னையில் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும், டீசல் மீதான மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைஅவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல அவர்கள் முடிவுசெய்திருந்தனர். ஆனால் போலீஸார் இதற்குத் தடை விதித்திருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை ஆயிரக்கணக்கான மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் கூடிஅங்கிருந்து கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.
அவர்களைத் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையேதள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான போலீசார் அங்குகுவிக்கப்பட்டனர்.
பின்னர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அப் பகுதியில் உள்ள பல்வேறு திருமணமண்டபங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications