பிற மொழி சினிமா: கர்நாடகத்திற்கு நோட்டீஸ்
டெல்லி:
பிற மொழி படங்களை வெளியிட 7 வார தடை விதித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பிறப்பித்த உத்தரவிற்குஉச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசிற்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
ஜெமினி பிலிம்ஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிற மொழிதிரைப்படங்களுக்கு கர்நாடக வர்த்தக சபை விதித்திருக்கும் தடை, தயாரிப்பாளர்களின் அடிப்படை உரிமையைப்பறிப்பதாகும். எனவே இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கர்நாடக வர்த்தக சபை விதித்த தடையின் எதிரொலியாக ஆந்திரா, கேரளா திரையுலகினர் கன்னட திரைப்படஉலகிற்கு ஒத்துழைப்பு தர மறுத்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் ஜெமினி பிலிம்ஸ் தாக்கல் செய்த மனுவில்சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கர்நாடகதிரைப்பட வர்த்தக சபையின் 7 வார தடைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications