சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி:
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான கோரிக்கையை உச்ச நீதிமன்றஅனைத்து நீதிபதிகள் குழு நிராகரித்தது.
சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்த வண்ணம்உள்ளனர். அண்மையில் சேலத்தில் நடந்த திமுக மாநாட்டில் கூட இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், மும்பையிலும், கொல்கத்தாவிலும் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 1999 டிசம்பர் மாதம்முதல் முறையாக உச்சநீதிமன்றம் இக் கோரிக்கையை நிராகரித்தது. அவ்வாறு உச்ச நீதிமன்றக்கிளை அமைப்பது நாட்டின்இறையாண்மைக்கும், உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது.
அதனையடுத்து 2001 ஏப்ரல் மாதம் அனைத்து நீதிபதிகள் குழு இந்தக் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்தது. அப்போது தனது முந்தையமுடிவில் மாற்றமில்லை என்று உறுதி செய்தது.
அண்மையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தலைமை நீதிபதிக்கு எழுதியகடிதத்தில், உச்சநீதிமன்றம் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்த பரிசீலித்த உச்சநீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழு, அதை ஏற்க முடியாது என்றும் முந்தைய நிலையில் இருந்து எந்த மாற்றமும்இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
இத் தீர்மானம் ஓரிரு நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications