மகாராஷ்டிர முதல்வர் பதவி: பவாரின் புது மிரட்டல்
மும்பை:
அடுத்த முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து காங்கிரசும் தேசியவாதகாங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது.
இரு தரப்பினரும் விட்டுக் கொடுக்க மறுத்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் அதில்சேர மாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் மிரட்டியுள்ளது.
தாங்கள் 71 இடங்களிலும் காங்கிரஸ் 69 இடங்களிலும் வென்றுள்ளதால் முதல்வர் பதவியை தங்களுக்கே தரவேண்டும் என சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
நேற்று சோனியா காந்தியும் சரத்பவாரும் சந்தித்துப் பேச்சு நடத்தியும் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படவில்லை.
இந் நிலையில் புதியாகத் தேர்வு செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது.இதில் சட்டமன்றத் தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். முதல்வர் பதவி இக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் இந்தத்தலைவர் தான் முதல்வராவார்.
வெளியில் இருந்து ஆதரவு?:
முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டுத் தர காங்கிரஸ் மறுத்தால், அக் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதுஎன்றும், அந்தக் கட்சியுடன் ஆட்சியில் பங்கெடுபப்பதில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இரு கட்சிகளும் கூட்டாக ஆட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்வர் பதவிவேண்டும் அல்லது வெளியில் இருந்து தான் ஆதரவு என சரத்பவார் கூறுவது காங்கிரசுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
இதனால் சோனியா-பவார் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. முதல்வர் பதவிகுறித்த சிக்கல் தீர மேலும் சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications