அரசியல் தொடர்புகளை விசாரிப்போம்: கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் & தர்மபுரி:

வீரப்பன் கொல்லப்பட்டதற்கு தமிழக அதிரடிப்படை மட்டும் காரணமல்ல. கர்நாடக அதிரடிப்படையும்தான் காரணம் என்று கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி போர்கர் கூறியுள்ளார்.

வீரப்பன் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன் இரவோடு இரவாகக் கிளம்பி அதிகாலையில் அவர் தர்மபுரிவந்துள்ளார்.

வீரப்பனின் அரசியல் தொடர்புகள்:

இதற்கிடையே வீரப்பனின் அரசியல் தொடர்புகள், அவனது பண பேரங்கள் குறித்து விசாரணக்கு உத்தரவிடப்போவதாக கர்நாட முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் தமிழக, கர்நாடகஎல்லையில் நிலவி வந்த பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக கர்நாடக, தமிழக போலீசாருக்கு தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரப்பனின் சாவோடு சில உண்மைகளும் புதைந்துவிடாமல் தடுக்கும் வகையில் அவனது அரசியல், பணத்தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட இருக்கிறோம் என்றார்.

ஜெவுடன் தரம்சிங் பேச்சு:

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை தரம்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துத்தெரிவித்தார்.

இதற்கிடையே வீரப்பன் கும்பலில் இடம்பெற்று அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவனது கூட்டாளிசந்திரே கெளடாவின் உடலை அடையாளம் காட்டவும் உடலைப் பெறவும் அவனது தந்தையை அதிரடிப்படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரான சந்திரே கெளடாவின் சொந்த ஊர் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம்ஆகும். சந்திரே கெளடா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் கெளடாவின் குடும்பத்தினர் சோகத்தில்மூழ்கினர்.

கெளடாவின் வீட்டுக்கு உறவினர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந் நிலையில் கெளடாவின் தந்தையைஅதிரடிப் படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கெளடாவை அடையாளம் காட்டுமாறும், பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கெளடாவின் தந்தை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+