கருணாநிதி, ராமதாஸ், வைகோ கருத்து

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதன் மூலம், இரு மாநில அரசுகளுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகஇருந்து வந்த தலைவலி தீர்ந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் தங்கி கண்ணம்மா படத்துக்கு வசனம் எழுதி வரும் கருணாநிதியிடம் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிரடிப் படையின் முக்கிய அதிகாரி இன்று அதிகாலை என்னைத்தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இது இரு மாநில அதிரடிப்படையிரின் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இருமாநில அதிரடிப் படையினருக்கும், குறிப்பாக கூடுதல் டிஜிபி விஜய்குமாருக்கும் எனது பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் இரு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த தலைவலி தற்போதுதீர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் வீரப்பன், ஒப்புக் கொண்டபடி சரணடைந்திருந்தால் அவனுக்கு இந்த கோர முடிவுஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ராமதாஸ்:

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், வீரப்பனுக்கு இப்படிப்பட்ட சாவு தான் வரும் என்பது எதிர்பார்த்தது தான்.25 ஆண்டுகளாக நீயா நானா என்று போலீசுடன் தனிப்பட்ட நபராக நின்று கண்ணாமூச்சி நடத்திக்கொண்டிருந்தான்.

இப்போது அவனது மரணத்தை யாரும் வைத்து அரசியல் ஆதாயம் தேடாமல் இருந்தால் சரி என்றார்.

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,

வீரப்பனின் மரணம் மக்களுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. அவனை சட்டப்படி கைது செய்து சட்டரீதியில்தண்டிக்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். எப்படியோ அவனது மரணம் பொது மக்களுக்கு நிம்மதியைத்தந்துள்ளது மகிழ்ச்சியே என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+