இலங்கை அரசின் திட்டத்தை நிராகரித்தனர் புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து புலிகள் கொடுத்த திட்டங்களுக்கு இலங்கை அரசு கொடுத்தபதில் திட்டத்தை புலிகள் நிராகரித்துவிட்டனர்.

மேலும் அடுத்த மாதம் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று வெளியான தகவல்களையும் விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும்என்று இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் தமிழ் சேவைப் பிரிவுக்கு அவர் அளித்த பேட்டியில்,

இலங்கை அரசின் இந்தத் தகவல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும்தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. எனவே அடுத்தமாதம்பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் யாரையும் இலங்கை அரசுப் பிரதிநிதிகள்சந்திக்கவில்லை என்றார்.

மேலும் தங்களது திட்டத்துக்கு இலங்கை அரசு கொடுத்த பதில் திட்டங்களையும் புலிகள் நிராகரித்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+