மொட்டை போட்ட விஜய்குமார்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

Vijayakumarசந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற உற்சாகத்தில் உள்ள தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர்விஜய்குமார் தனது குடும்பத்தினருடன் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.அத்தோடு மொட்டையும் அடித்து தனது நேர்த்திக் கடனைச் செலுத்தினார்.

இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் அந்தியூரில் உள்ள பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றஅவர், அங்கு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கிய அவர் பின்னர் மொட்டை அடித்து நேர்த்திக் கடன்செலுத்தினார்.

கடவுளுக்கு நன்றி செலுத்தவே இந்த மொட்டை என்றார் விஜய்குமார். இதேபோல சிறப்பு அதிரடிப்படையினர்பலரும் மொட்டை அடித்து வருகின்றனர்.

முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்த விஜய்குமாரை அதிரடிப்படை வீரர்கள் தோளில் தூக்கிபாராட்டினர். அவரிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

குருவை மிஞ்சிய சிஷ்யன் !

வீரப்பனை சுட்டு வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள விஜயக்குமார், தனது குரு வால்டேர்தேவாரத்தையும் மிஞ்சி விட்டார்.

தேவாரத்தின் தலையை காவு வாங்காமல் விட மாட்டேன் என்று வீரப்பனும், வீரப்பனைப் பிடிக்காமல் சாகமாட்டேன் என்று தேவாரம் தங்கள் கடா மீசைகளை முறுக்கிக் கொண்டு ஒரு காலத்தில் சவால் விட்டுக்கொண்டிருந்தனர்.

ஆயினும் சவால் விட்டபடி தேவாரத்தால் வீரப்பனைப் பிடிக்க டியவில்லை. மாறாக வீரப்பனிடமிருந்துஅதிர்ஷ்டவசமாக பல முறை அவர் உயிர் தப்ப நேரிட்டது. இருந்தாலும் தனது கொள்கையை சற்றும் தளர்த்திக்கொள்ளாமல் தொடர்ந்து விடா முயற்சியுடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.

இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேவாரம் ஒடுக்கப்பட்டார். அதிரடிப் படையும் ஏனோ, தானோவானது.

திமுக அரசு போய் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பின்னர், டிஜிபி பதவியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த தேவாரம் மீண்டும் அதிரடிப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வீரப்பனை நெருங்கமுடியவில்லை.

இந் நிலையில் தான் தற்போதைய சென்னை கமிஷ்னர் நடராஜ் அதிரடிப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவரது காலத்தில்தான் வீரப்பன் கூட்டாளிகளின் எண்ணிக்கை சடசடவென குறையத் தொடங்கியது. 5 பேர்கொண்ட சிறு குரூப்பாக வீரப்பன் மாறியது நடராஜ் காலத்தில்தான்.

எண்கெளன்டரால் அதிரடிப்படைக்கு...

இந் நிலையில் தான் வெங்கசேட பண்ணையாரை எண்கெளன்டர் போட்டு தமிழக போலீஸ் கொல்ல, கடும்விமர்சனத்துக்கு உள்ளானார் விஜயக்குமார். விமர்சனங்களைத் தாங்க முடியாமல் கமிஷ்னர் பதவியை விட்டுவிட்டுஅதிரடிப்படைக்குத் தலைமை ஏற்கப் போனார்.

தேவாரத்தின் சிஷ்யரான விஜய்குமார், தனது குருவின் பாணியில் தொடர்ந்து வீரப்பன் வேட்டையை தீவிரமாகநடத்தினார்.

எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜியாக காஷ்மீரில் பணியாற்றி தீவிரவாதிகளை ஒடுக்கி அனுபவத்தைக் கொண்டுமிகவும் நேர்த்தியாகவும், பொறுமையாகவும் திட்டமிட்டு செயல்பட்டார். வீரப்பனை தேடி காட்டுக்குள்அலையாமல், அவனை உளவாளிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினார்.

வன கிராம மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளைச் செய்தார். பின்னர் கிராமத்தினரையே திசை திருப்பி தனக்குசாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டு, வீரப்பன் பாணியிலேயே அவனை போலீஸ் வலையில் விழ வைத்துவீழ்த்தியுள்ளார் விஜய்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+