ஜெவை பாராட்டி நவ.8ல் திரையுலக விழா
சென்னை:
தமிழ் சினிமாவுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்தமாதம் 8ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்த திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து ஆலோசனை நடத்த பிலிம்சேம்பர் ஹாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளிதரன், துணை தலைவர்கள்எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ராஜன், இயக்குநர் கே.பாலச்சந்தர், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி)தலைவர் விஜயன், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக கே.முரளிதரன் ஒரு அறிக்கையைவாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
பெரும் அழிவிலிருந்து தமிழ் சினிமாவை மீட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்க தமிழ் திரை உலகின் சார்பில்மாபெரும் நன்றி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா அடுத்த மாதம் 8ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கே.பாலசந்தர்தலைமையில் நடைபெற இருக்கிறது.
விழாவின் தொடக்கத்தில் தமிழகத்திலுள்ள பிரபல பாடகர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினைப்பாட இருக்கிறார்கள். பின்பு பிரபல நடிகர்கள் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கே.பாலசந்தர் தலைமையுரை ஆற்றுவார் அவரைத் தொடர்ந்து திரைஉலகப் பிரதிநிதிகள்ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்துவார்கள். இறுதியில் முதல்வர் உரையுடன் விழா நிறைவு பெறும்.
விழாவில் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் அதற்கான ஒத்திகைகளில் பங்குபெறுவதற்கும், விழா ஏற்பாடுகளை செய்வதற்கும் ஏதுவாக அடுத்த மாதம் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்களில் தமிழ்த்திரைப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டிருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications