ஆளுநர் ராம்மோகன் ராவ் கோவாவுக்கு மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கோவா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்படுவார் என்று தெரிகிறது.தமிழகத்தைப் போன்ற பெரிய மாநிலத்தில் ஆளுநராக இருந்தவரை கோவாவுக்கு ஆளுநராக்குவது பதவிஇறக்கமாக்கவே கருதப்படும்.

அவருக்குப் பதிலாக ஆந்திர ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றுதெரிகிறது.

மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த 3 நாட்களாக ராம்மோகன் ராவ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீலை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் சட்ட அமைச்சர் பரத்வாஜையும் அவர்சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ராவ், பின்னர் ஜனாதிபதி அப்துல் கலாமையும்சந்தித்துள்ளார்.

மாநில அரசின் செயல்பாடு குறித்து வழக்கமாக ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் குறிப்புகளைக் கூட ராவ்ஒழுங்காக ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருந்து வந்தார், மேலும் பெரும்பாலான நேரம் தமிழகத்தை விட்டுவெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் டூர் அடித்துக் கொண்டிருந்தார் ராம்மோகன் ராவ்.

இதற்காக இரண்டு முறை ராவை ஜனாதிபதி கடிதம் மூலம் கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ராவை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை திமுக தொடர்ந்து நச்சரித்து வருகிறது. ஆனால்,பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த நாராயணனின் உதவியால் தப்பிக்கொண்டிருக்கிறார் ராவ்.

ராஜிவ் காலத்தில் இருந்தே காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவராக விளங்கும் நாராயணனுக்கு ராம்மோகன்ராவுடன் நல்ல நட்பு உண்டு. இதனால் தான் திமுகவின் நெருக்குதலையும் தாண்டி தமிழக ஆளுநராகதாக்குப்பிடித்து வருகிறார்.

இருந்தாலும் முதல்வர் ஜெயலலிதா அரசுடன் ராவ் காட்டி வரும் நெருக்கம் காங்கிரசையேஎரிச்சல்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து அவரை விலக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக ராவிடம் இருந்து ராஜினாமா கடித்தை மத்திய அரசு வாங்கி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ராவின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அவரைஒட்டுமொத்தமாக நீக்க விரும்புகிறார். ஆனாலும் நாராயணன் மூலமாக தொடர்ந்து ஆளுநர் பதவியில் நீடிக்க ராவ்முயல்வதால், அவரை கோவா போன்ற யூனியன் பிரதேச ஆளுநராக்கலாம் என காங்கிரஸ் தலைமையிடம்பாட்டீல் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+