1 ரூபாய் கட்டினால் பிஎஸ்என்எல் தொலைபேசி!!
சென்னை:
1 ரூபாய் மட்டும் கட்டி டெலிபோன் இணைப்பைப் பெறும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்துகிறது.
சாதாரண லேன்ட் லைன் தொலைபேசி இணைப்பைப் பெற டெபாசிட் கட்டணம் ரூ. 5,000 ஆக இருந்தது. செல்போன்கள் வரவால் லேன்ட்லைன் இணைப்பு வாங்குவோரின் எண்ணிக்கை மடமடவென சரிந்ததால் டெபாசிட் கட்டணத்தை ரூ. 3,000 ஆக குறைத்ததுபி.எஸ்.என்.எல்.
ஆனாலும், செல்போன் போட்டியை சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து ரூ. 1,000 மட்டும் முதலில் டெபாசிட்டாகக் கட்டிவிட்டு மீதி ரூ.2,000த்தை தவணை முறையில் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இருந்தாலும் இத் திட்டம் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. இதையடுத்து 1 ரூபாய் மட்டும் கட்டி இணைப்பைப் பெறும் திட்டத்தைஅறிமுகப்படுத்தவுள்ளது பி.எஸ்.என்.எல்.
இத் திட்டத்தின்படி முதலில் போனை வாங்கி கொண்டு டெபாசிட் தொகையான ரூ. 1,000த்தை மாதாந்திர பில்லுடன் சேர்த்து 6 மாதம்தவணை முறையில் செலுத்தலாம். அதாவது முதல் மாத பில்லுடன் ரூ. 250ம், அடுத்த ஐந்து மாதங்கள் பில்லுடன் தலா ரூ. 150ம் கட்டலாம்.
வரும் நவம்பர் 15ம் தேதி முதல் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.
வெளியில் இருந்து வரும் அழைப்புகளுக்கு மட்டும் பேசும் வசதி கொண்ட (ஒன்வே லைன்) தொலைபேசி இணைப்புக்கான டெபாசிட்இப்போது ரூ. 500 ஆக உள்ளது. புதிய திட்டத்தின் படி முதல் மாதம் ரூ. 125 மட்டும் கட்டிவிட்டு மீது தொகையை மாதம் ரூ. 75 வீதம் ஐந்துமாதங்களில் செலுத்தலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
எஸ்.டி.டி வசதியுடனான போனுக்கு டெபாசிட் தொகை ரூ. 2,000 ஆகும். இதையும் வெறும் 1 ரூபாய் மட்டும் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.முதல் மாத பில்லுடன் ரூ. 500ம், அடுத்த 5 மாதங்கள் தலா ரூ. 300மாக டெபாசிட்டை தவணை முறையில் செலுத்தலாம்.
மேலும் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சாதாரண டெலிபோன் இணைப்பை பெறுபவர்களுக்கு 50 மணி நேரத்துக்கான இன்டர்நெட்இணைப்பையும் இலவசமாக வழங்கவுள்ளது பி.எஸ்.என்.எல்.
மேலும் பி.எஸ்.என்.என். செல்போனின் 3 ரீ-சார்ஜ் கூப்பன்களை ஒரே நேரத்தில் வாங்கினால் ஒரு கூப்பன் இலவசமாகத் தரப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும்.
இது தவிர அடுத்த மாதத்தில் போஸ்ட் பெய்ட்-525 திட்டத்தின் கீழ் இரு செல்போன் இணைப்புகள் வாங்கினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம்தேதி வரை இந்த இரு போன்களுக்கு இடையே எத்தனை முறை வேண்டுமானாலும் இலசவமாகப் பேசிக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
பாரதி, ரிலையன்ஸ், டாடா ஆகிய தனியார் தொலைபேசி நிறுவனங்கள் செல்போனுடன் தரைவழி தொலைபேசி சேவையையும் பல விதகட்டண சலுகைகளுடன் அறிமுகப்படுத்தி கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளதால் அதைச் சமாளிக்கவே பி.எஸ்.என்.எல். இந்த அதிரடிசலுகைகளை அறிவித்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications