10 லட்சம் பேருக்கு குடியுரிமை: செளதி திட்டம்
துபாய்:
செளதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு அந் நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் வகையில் குடியுரிமைவழங்கப்படவுள்ளது.
முதல்கட்டமாக 10 லட்சம் பேருக்கு இந்தக் குடியுரிமை வழங்கவும், அந் நாட்டினருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் இவர்களுக்கும்வழங்கவும் செளதி அரசு முடிவு செய்துள்ளது.
விசா காலம் முடிந்து தங்கள் சொந்த நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவர்களும் இந்த குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனசெளதி அரசு அறிவித்துள்ளது. இப்போது அந் நாடடில் சுமார் 88 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியர்கள் மற்றும் பிற நாட்டு அரேபியர்கள். இதில் ஆசியர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியர்களாவர். இவர்களில் 10 லட்சம் பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
அதிலும் மருத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனசெளதி அரசு அறிவித்துள்ளது.
இதனால் குடியுரிமை பெற கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications