சபதத்தை நிறைவேற்றிய "கன்னி" வீரர்கள் !

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வீரப்பனைப் பிடிக்காமல் கல்யாணம் செய்ய மாட்டோம் என்று சபதமிட்டிருந்த அதிரடிப்படை வீரர்கள் இப்போது தங்களது சபதம்நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

STFதமிழக அதிரடிப்படையில் இருந்த வீரர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் திருமணமாகாத இளைஞர்கள். வீரப்பனைப் பிடிப்பதில் படுஉறுதியாக இருந்த இவர்கள் தேடுதல் வேட்டையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கும் வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம் என்று சபதமே போட்டிருந்தனர்.இப்போது அவர்களது சபதம் நிறைவேறி விட்டதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் முகாமில் உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த மகிழ்ச்சியை அவர்கள் அடிக்கடிவெளிப்படுத்தினர்.

ஷீலா ராணி சுங்கத் பேசுகையில் இங்கே கல்யாணாமாகாத இளைஞர்கள் நிறைய பேர் உள்ளீர்கள். அவர்கள் மேற்கொண்ட சபதம் குறித்துஅறிந்தேன். இப்போது அது நிறைவேறி விட்டது. இனிமேல் ஊருக்குப் போய் உங்களது புது வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பியுங்கள்என்றார் புன்னகையுடன்.

இதைக் கேட்டதும் வீரர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பினர்.

இதேபோல, விஜயக்குமார் பேசுகையில், பேச்சலர்கள் மட்டும் தியாகம் செய்யவில்லை, கல்யாணம் ஆனவர்களும் இங்கேகஷ்டப்படத்தான் செய்தார்கள். அவர்களும் ஊருக்குப் போய் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறியபோது கைதட்டல்ஒலி காட்டை கலக்கியது.

60 பஸ்களில் வரும் வீரர்கள்:

சென்னையில் வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வழங்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக சிறப்புஅதிரடிப்படையினர் 60 பேருந்துகளில் சென்னை வருகின்றனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழாவு, இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

752 அதிரடிப் படையினரும் 60 பேருந்துகளில் சென்னை வரும் அதே வேளையில் அவர்களது குடும்பத்தினரும் சென்னைக்குவருகிறார்கள். பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட காவலர்கள் சார்ந்துள்ள மாவட்டங்களின் உயர் அதிகாகள் செய்துவருகிறார்கள்.

இதற்கிடையே, அதிரடிப்படையினரின் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. முகாம்களில் இருக்கும் வீரர்கள் தங்களது வாகனங்களில்ஏறிக் கொண்டு காட்டுப் பகுதி கிராமங்களை சுற்றிச் சுற்றி வந்தவண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+