காட்டுக்குள் செல்ல வேண்டாம்: போலீஸ் எச்சரிக்கை
கொளத்தூர்:
வீரப்பனின் பணத்தையோ, ஆயுதங்களையோ எடுக்க அவன் உலவிய காட்டுப் பகுதிக்குள் யாரும் செல்லக் கூடாது என போலீசார்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரடிப்படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால், காட்டுக்குள் யாரும் போக வேண்டாம் என கொளத்தூர் போலீஸார்ஜீப்களில் மைக்குகளைக் கட்டிக் கொண்டு கிராமம் கிராமாக சென்று எச்சரிக்கை செய்த வண்ணம் உள்ளனர்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவன் புதைத்து வைத்துள்ள பணம், பொருட்களை எடுப்பதற்காக பல்வேறு மலைகிராமங்களைச் சேர்ந்த மக்கள் காட்டுக்குள் படையெடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்திலிருந்து கோவிந்தம்பாடி, காரைக்காடு, கொளத்தூர், காவேரிபுரம்,பெரிய தண்டா ஆகிய கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், வீரப்பன் சாவுக்குப் பின்னர் அதிரடிப்படை நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. மேலும் சிலரைப் பிடிக்க வேண்டியுள்ளதால்தொடர்ந்து அதிரடிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
எனவே காட்டுக்குள் கிராமத்தினர் போவதைத் தடுத்து நிறுத்தவும். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் காவல்துறை பொறுப்பல்லஎன்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜீப்களில் மைக்குகளைக் கட்டிக் கொண்டும் போலீசார் இந்த அறிவிப்புகளைச் செய்து வருகின்றனர்.
வீரப்பனுடன் இருந்த தமிழ் தேசிய விடுதலைப் படையினர் சிலரையும், வீரப்பனின் ஆயுதங்கள், பணத்தையும் அதிரடிப்படையினர்தொடர்ந்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications