பள்ளி, கல்லூரி அருகே சிகரெட் விற்க தடை
சென்னை:
பள்ளி, கல்லூரிகளைச் சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வரும் டிசம்பர்1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
பல் மருத்துவ அகாதெமி விழாவில் பங்கேற்ற பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிப்பதில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்றுதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் சிகரெட், பீடி பிடிக்கத் தடை, புகையிலை பொருள்களை விளம்பரம் செய்வதற்கு தடை, 18 வயதுக்குகுறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யத் தடை போன்றவை அப்படியேதான் அமலில் உள்ளன.
இத் தடைகள் இன்னும் கடுமையாக அமல்படுத்தப்படும். இதற்காக புகையிலைப் பொருள்களின் விற்பனையை உரிய முறையில்கண்காணிப்பதற்காக புகையிலைச் சட்டத்தில் 6 புதிய விதிகள் சேர்க்கப்பட்டன. இந்த விதிகள் படிப்படியாக அமலுக்கு வரும்.
சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்களில் நிகோட்டின், தாரின் அளவு எத்தனை சதவீதம் உள்ளது என்பதை அதன் அட்டைப்பெட்டியின் மேலே தெளிவாக அச்சிடவேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை விரிவாக தெரிவிக்க வேண்டும் என்ற இரு விதிகளும்அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications