மன்மோகன்: கூட்டணி கட்சிகள் போட்டி போட்டு மனு
சென்னை:
சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டி போட்டுபல்வேறு கோரிக்கை மனுக்களைக் கொடுத்தன.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலைய பொன்விழா தொடக்க விழா மற்றும் புதிய அணு உலைத் திட்டத்தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை சென்னை வந்தார். பிற்பகலில்கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து விட்டு ஆளுநர் மாளிகைக்கு அவர் வந்தார்.
அப்போது காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுக்களைக்கொடுத்தன. ஒவ்வொரு கட்சியும் பல்வேறு கோரிக்கைகளை கொடுத்ததால் மன்மோகன் மலைத்துப் போனார்.
திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலாளர்துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பிரதமரை சந்தித்துகோரிக்கை மனுவைக் கொடுத்தது.
ஊட்டி இந்துஸ்தான் புகைப்படத் தொழிற்சாலையை தனியாரிடம் விடக் கூடாது, கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும், முரசொலி மாறனின் கனவான நான்குநேரி தொழிற்பூங்காவைஅமைக்க விரைவான நடவடிக்கை தேவை என பல்வேறு கோரிக்கைகளை திமுக அடுக்கியிருந்தது.
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான குழுவும் தனது பங்குக்கு பல்வேறுகோரிக்கைகளை வைத்திருந்தது. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சேது சமுத்திரம் திட்டத்தைவிரைவுபடுத்த வேண்டும், ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பலகோரிக்கைகளை அக்கட்சி வைத்திருந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பிலும் ஒரு குழு பிரதமரை சந்தித்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையிலானஅக்குழுவினர் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரைவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தது.
பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மன்மோகனை சந்தித்து மனு கொடுக்க வந்ததால் ஆளுநர்மாளிகை முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு கட்சியும் பிரதமரிடம் தங்களுக்கு உள்ளசெல்வாக்கை அடுத்தவர்களுக்கு காட்டிக் கொள்ள முயற்சித்தது பளிச்சென தெரிந்தது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications