விஜயக்குமாருக்கு அமெரிக்கா அழைப்பு
சென்னை:
புத்திசாலித்தனமாக திட்டமிட்டு சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற திட்டத்தைத் தீட்டிய தமிழகஅதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் அமெரிக்கா வருமாறு அந்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும்எப்.பி.ஐ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவராலும் பிடிக்க முடியாத நபராக விளங்கிய வீரப்பன், தமிழகஅதிரடிப்படையின் வித்தியாசமான அணுகுமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான். அதிரடிப்படைத் தலைவர்விஜயக்குமாரின் தலைமையில் அதிரடிப்படை அமைத்த வியூகம், வீரப்பனை காட்டிலிருந்து வெளியேவரவழைத்த புத்திசாலித்தனம் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.
இந் நிலையில் அமெரிக்காவிலும் வீரப்பன் என்கவுன்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. உலக அளவில் மிகப் பிரபல புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ. ஆகியவைவிஜயக்குமாரின் வியூகம் குறித்து ஆச்சரியமடைந்துள்ளன.
விரைவில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த அமைப்புகளின் மாநாட்டில் விஜயக்குமார் கலந்து கொண்டுஇந்த தாக்குதல் குறித்து விவரிக்குமாறு அவை விஜயக்குமாரை கேட்டுக் கொண்டுள்ளன.
இதுதொடர்பாக விஜயக்குமாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மத்திய வெளியவுறவு அமைச்சகத்திற்குவந்துள்ளது. பிரதமர் அனுமதிக்காக இந்தக் கடிதம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதிஅளித்தால் விஜயக்குமார் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, விஜயக்குமாரின் திறமையை தேசிய பாதுகாப்புப் படைக்குப் (கருப்புப் பூனை) பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் விரும்புவதாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய பாதுகாப்புப் படையில் விஜயக்குமார் இடம் பெற்றிருந்தார். ராஜீவ்காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பாதுகாப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது அவரது பாதுகாப்பையும் விஜயக்குமார்தான் கவனித்துவந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications