காவிரி: கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்நிராகரித்துவிட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் போக்குக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
3 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் மன்ற குழுவின் தலைவர் சிங்குக்கும், இரு உறுப்பினர்களுக்கும் இடையேகருத்து வேறுபாடு நிலவுகிறது.
இறுதித் தீர்ப்பை விரைந்து வழங்க முடிவு செய்த காவிரி நடுவர் மன்றத்தின் இரு உறுப்பினர்களும் கர்நாடகம்மற்றும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து நிலைமையை நேரில் ஆராய முடிவு செய்தனர். இதற்குத் தடைவிதித்தார் நடுவர் மன்றத்தின் தலைவர் சிங்.
இந் நிலையில், மன்றத்தின் தலைவருக்கும் அதன் இரு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்நிலவுவதால், அந்த நடுவர் மன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் இருவரும் கர்நாடக,தமிழக காவிரி டெல்டா பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்கும் தடை விதிக்க கோரியும் கர்நாடகத்தைச் சேர்ந்தகாந்தி சாகித்ய சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதை ஆதரித்து கர்நாடக அரசும் ஒரு மனு தாக்கல் செய்தது. கர்நாடக அரசின் பினாமியாகத் தான் காந்தி சாகித்யசங்கம் இந்த வழக்கைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மிக விரைவில்வெளிவர உள்ளதால், அதைத் தடுக்கவே இந்தக் கோரிக்கையை காந்தி சாகித்ய சங்கம் மூலமாக கர்நாடகம்வைத்துள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ருமா பால், நீதிபதி அருண் குமார் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், காந்தி சாகித்யசங்கத்தின் மனுவையும், அதை ஆதரித்து கர்நாடகம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் கூறுகையில், ஒரு பக்கம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக சொல்லிக் கொண்டே, நடுவர்மன்றத்துக்கு எதிராக கர்நாடகமே மறைமுகமாக வழக்கு நடத்துவது முறையற்ற செயல்.
அதே போல நடுவர் மன்றத்தின் தலைவரும் அதன் இரு உறுப்பினர்களும் முரண்பாடான வகையில் உத்தரவுகளைபிறப்பித்ததும் சரியல்ல என்றனர் நீதிபதிகள்.
அதே நேரத்தில் மெஜாரிட்டியின் அடிப்படையில், 2 உறுப்பினர்கள் எடுத்த முடிவே செல்லும் என்றும் நீதிபதிகள்கருத்து தெரிவித்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications