அதிரடிப் படையினருக்கு தலா 2 கிரவுண்டு நிலம்!
சென்னை:
வீரப்பனை வீழ்த்திய தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 752 பேருக்கும் தலா 2 கிரவுண்டு (4,800 சதுர அடி)நிலத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் வீழ்த்திய தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு இலவச வீட்டு மனை,ஒரு பதவி உயர்வு, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகிய பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தற்போது வீரர்களுக்குரிய இலவச வீட்டு மனை குறித்த ஒதுக்கீடு தீவிரமாக நடந்து வருகிறது. எந்த ஊரில் நிலம்வேண்டும் என்ற விருப்பக் கடிதம் அதிரடிப்படை வீரர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வீரர்கள் கோரிய இடத்தில் வீட்டு மனைகளை ஒதுக்கும் பணி தமிழக வீட்டு வசதி வாரியஅதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்ட இடத்தில் வீட்டு மனை இல்லாத பட்சத்தில் வேறுஇடங்களில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 கிரவுண்டு நிலம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. 752 பேரில் 60க்கும்மேற்பட்டோர் சென்னையில் நிலம் கேட்டுள்ளனர். மற்றவர்கள் கோவை, சேலம், ஈரோடு, மதுரை போன்றஇடங்களில் நிலம் கேட்டுள்ளனர்.
நில ஒதுக்கீடு முடிந்ததும் அதற்குரிய உத்தரவுகளை வருகிற 30ம் தேதி சென்னையில் நடைபெறும் பாராட்டுவிழாவின்போது முதல்வர் ஜெயலலிதா வீரர்களின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்குவார்.
அதே போல அதிரடிப்படைக்கு உதவியாக இருந்த வனப் பகுதிகளைச் சேர்ந்த காவல் நிலையங்களின் சிலபோலீசார், வனத்துறையினர், மற்றும் அதிரடிப்படையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவிட்டுச் சென்ற சில வீரர்கள்ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கலாம் என முதல்வரிடம் விஜய்குமார் பரிந்துரைத்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications