தலைமை செயலாளருக்கு காங்கிரஸ் கண்டனம்
சென்னை:
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நடத்தை விதிகளை மீறி செயல்படுகிறார்என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைச் செயலாளர் இந்திய நிர்வாகப் பணியின் கீழ் வருபவர். அத்தகையோர் நிர்வாகம் தவிர்த்து அரசியல்ரீதியான நிலைப்பாடுகள் எதுவும் எடுக்க முடியாது. ஆளுநர் நியமனம் குறித்து இந்தியக் குடியரசு தலைவரைகேள்வி கேட்கவும் முடியாது.
ஆனால், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பிரமாண வாக்குமூலத்தில்,எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இது உரிமை மீறலாகும்.
ஆனால் தமிழக ஆளுநரை மாற்றக் கூடாது என்று தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தை நாடியது,குடியரசுத் தலைவரின் மதிப்பையும், மரியாதையையும் இழுக்குபடுத்தும் செயலாகும். நடுநிலைமையிலிருந்துதலைமைச் செயலாளர் தவறிவிட்டார்.
மேலும் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகவும் செயல்பட்டுள்ளார். இது இந்திய அரசின் பணியாளர் நலத்துறைஅமைச்சகத்தின் நடவடிக்கைக்குரியதாகும் என்று கூறியுள்ளார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications