இன்னும் ஒழியவில்லை தேவதாசி முறை!
டெல்லி:
நாட்டில் தேவதாசி முறை முறை இப்போதும் தொடர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான குற்றங்களைத் தடுப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தவிவரம் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் விவரம்:
இன்னும் தேவதாசி முறை முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. வறுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனபெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை கோயிலுக்கு நேர்ந்து விடுவது இப்போதும் நடந்து கொண்டு தான்உள்ளது.
பெரிய கோயில்களுக்குப் பதிலாக சிறிய கோயில்களில் அல்லது கோயில் அர்ச்சகர்களின் வீடுகளில்வெளியுலகத்திற்குத் தெரியாமல் பெண் குழந்தைகளை நேர்ந்து விடுவது நடைபெறுகிறது. அங்கு பாலியல்ரீதியில்அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தான்வாழ்க்கையாகவே அமைந்துவிடுகிறது.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாகவே இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. இது தொடர்பாக பல மாநிலங்களில் உள்ள சட்டங்கள்திருப்தியளிப்பனவாக இல்லை.
தேவதாசி முறையைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவைஅமைக்க வேண்டும். இது தொடர்பான வழக்குகளை விபச்சார வழக்குகளாக மாற்ற வேண்டும். கோவிலின்பெயராலும் சாமியின் பெயராலும் பெண்களை அடிமைகளாக குத்தகைக்கு எடுத்து பாலியல்ரீதியில்பயன்படுத்துவோர் மீது விபச்சார தடுப்பு வழக்கு போட வேண்டும்.
இந்த தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பரம ஏழைகள், சமூக, ஜாதியரீதியில்கடுமையாக ஒடுக்கப்பட்டவர்கள். இதனால், இந்தக் கொடுமைக்கு எதிராக அவர்கள் புகார் கொடுக்கவும் முன்வருவதில்லை.
தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களால் தேவதாசி முறைக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தமுடியவில்லை. எனவே இந்த முறையை ஒழிப்பதற்கான நடைமுறை சாத்திக்கூறுகள் அடங்கிய கடுமையானசட்டத்தை இயற்றவும், தேவதாசிப் பெண்களை மீட்டெடுக்க போதிய நடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications